மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகம் இடமாற்றம்
Oct 25, 2020, 15:04 IST1603618462000
தர்மபுரி
மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகம் இடமாற்றம்
தர்மபுரி மாவட்ட குற்றப்பிரிவு மற்றும் நில அபகரிப்பு தடுப்பு பிரிவு அலுவலகங்கள், ஆயுதப்படை வளாகத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், தர்மபுரி
மாவட்ட எஸ்.பி அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வந்த மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகம் மற்றும் நில அபகரிப்பு தடுப்பு பிரிவு அலுவலகங்கள், நிர்வாக காரணங்களுக்காக, வெண்ணாம்பட்டியில் உள்ள ஆயுதப்படை அலுவலக வளாகத்துக்கு மாற்றம் செய்யப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.