கொரோனா அச்சம் – மூதாட்டி ரயில் முன் பாய்ந்து தற்கொலை!

 

கொரோனா அச்சம் – மூதாட்டி ரயில் முன் பாய்ந்து தற்கொலை!

தருமபுரி

தருமபுரி அருகே கொரோனா அச்சத்தால் மூதாட்டி ரயில் முன்பு பாய்ந்த தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தருமபுரி மாவட்டம் பாலக்கேடு அருகேயுள்ள காட்டாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் மங்கை (75). இவருக்கு கடந்த ஒரு வார காலமாக சளி, காய்ச்சல் இருந்த வந்துள்ளது. தனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளதோ? என அச்சமடைந்த மூதாட்டி, வீட்டில் தனிமையில் இருந்து வந்துள்ளார்.

கொரோனா அச்சம் – மூதாட்டி ரயில் முன் பாய்ந்து தற்கொலை!

சிகிச்சை பெற்றாலும் உயிர் பிழைக்க மாட்டோம் என கருதிய அவர், தன்னால் பிறருக்கு தொற்று ஏற்பட்டுவிடக் கூடாது என வாழ்வை முடித்துக் கொள்ள தீர்மானித்தார். இதனையடுத்து, தருமபுரி அடுத்த சோமனஅள்ளியில் உள்ள ரயில்வே தண்வாடளத்திற்கு சென்ற அவர் அந்த வழியாக பெங்களூரு நோக்கி சென்ற ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்த தருமபுரி ரயில்வே போலீசார், மூதாட்டியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். கொரோனா அச்சத்தால் மூதாட்டி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் கிராம மக்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.