கோவையில் ஒட்டலில் வாங்கிய சாம்பாரில் பல்லி கிடந்ததால் வாடிக்கையாளர் அதிர்ச்சி!

 
lizard

கோவை சித்தாபுத்தூரில் உள்ள தனியார் ஓட்டலில் வாங்கிய பார்சல் சாம்பாரில் பல்லி இறந்த நிலையில் கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

கோவை சித்தாபுத்தூர் வி.கே.கே மேனன் சாலையில் இட்லி விருந்து என்ற பெயரில் தனியார் உணவகம் செயல்பட்டு வருகிறது. நேற்றிரவு அதே பகுதியை சேர்ந்த ராமமூர்த்தி என்பவர், கடையில் தனது நண்பர்களுடன் இட்லி, பணியாரம் உடன் சாம்பார் பார்சல் வாங்கி உள்ளார். வீட்டுக்கு சென்று பார்சலை பிரித்து பார்த்தபோது, சாம்பாரில் உயிரிழந்த நிலையில் பல்லி கிடந்துள்ளது.

lizard

இதனை கண்டு ராமமூர்த்தி அதிர்ச்சியடைந்தார். இதனை அடுத்து, உடனடியாக பல்லி இருந்த பார்சலை எடுத்துச்சென்று உணக ஊழியர்களிடம் முறையிட்டார். அப்போது, ஊழியர்கள் கடை உரிமையாளர் வெளியே சென்றுள்ளதாகவும், காலை வந்து பார்க்கும்படி மெத்தனமாக பதில்  அளித்துள்ளனர்.

இதனால், ஆத்திரமடைந்த ராமமூர்த்தி, பார்சலில் பல்லி இருப்பதை தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்து, அதனை சமூக வலைதளங்களில் வெளியிட்டார். இந்த காட்சிகள் வைரலாகிய நிலையில், இந்த சம்பவம் குறித்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளிடம் புகார் அளிக்க உள்ளதாக ராமமூர்த்தி தெரிவித்துள்ளார்.