கோவை காட்டூர் காவல் நிலையத்தில் 3 போலீசாருக்கு கொரோனா பாதிப்பு!

 
cbe kattur

கோவை காந்திபுரம் காட்டூர் காவல் நிலையத்தில் பணிபுரியும் 3 போலீசாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்கள் மட்டுமின்றி மருத்துவர்கள், போலீசார் என முன்கள பணியாளர்களும் வைரஸ் பாதிப்புக்கு இலக்காகி வருகின்றனர். இந்த நிலையில், கோவை காந்திபுரம் காட்டூர் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வரும் 3 போலீசாருக்கு கொரோனா வைரஸ் அறிகுறிகள் தென்பட்டன. இதனை அடுத்து, அவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. 

corona

இதில், மூவருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனை அடுத்து, அவர்கள் மூவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காவல் நிலையத்தில் சுகாதாரத்துறையினர் கிருமிநாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும், காட்டூர் காவல் நிலையத்தில் பணிபுரியும் அனைத்து காவலர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.