நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்... ஈரோட்டில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் ஆலோசனை கூட்டம்!

 
vijay

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக, ஈரோட்டில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் தேர்தலை எதிர்கொள்வது தொடர்பான ஆலோசனை கூட்டம் ஈரோடு பிரப் சாலையில் அமைந்துள்ள யாளி ரெசிடென்ட் ஓட்டல் கூட்ட அரங்கில் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்திற்கு ஈரோடு மாவட்ட தலைவரும், பொறுப்பாளருமான எம்.பாலாஜி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, ஆலோசனைகளை வழங்கினார்.

vijay

கூட்டத்தில் மாவட்ட இளைஞரணி தலைவர் பிரகாஷ், மாவட்ட செயலாளர் சீனிவாசன், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் வெங்கடேஷ், மாநகரத் தலைவர் அக்கிம் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.இந்த ஆலோசனை கூட்டத்தின்போது, தமிழகத்தில் நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் ஈரோடு மாநகராட்சியின் மொத்தமுள்ள 60 வார்டுகளிலும் போட்டியிடுவது என்று முடிவெடுக்கப்பட்டது.

இதுதொடர்பாக மக்களிடையே தற்போது நிலவி வரும் அன்றாட அத்தியாவசிய பிரச்சனைகள் குறித்து, மக்களை சந்தித்து உரிய தீர்வு தேடிதந்து, உள்ளாட்சி தேர்தலை எதிர்கொண்டு 60 வார்டுகளிலும் வெற்றி பெறுவது தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டது. மேலும், உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தினர் பணியாற்றுவது தொடர்பாகவும் ஆலோசனைகள் வழங்கப்பட்டது. இந்த கூட்டத்தில் விஜய் நற்பணி மன்றம், இளைஞரணி, மாணவரணி, தொண்டரணி மற்றும் சார்பு அணிகள் சார்பில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்