ஈரோடு எல்லப்பாளையத்தில் தார் சாலை அமைக்கும் பணி துவக்கம்!

 
new road work

ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட எல்லப்பாளையம் முதல் மாமரத்துப்பாளையம் வரையில் ரூ.1 கோடி மதிப்பில் புதிததாக தார்ச்சாலை அமைக்கும் பணி நேற்று தொடங்கப்பட்டது.

ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட எல்லப்பாளையம் - மாமரத்துப்பாளையம் வரை 3 கிலோ மீட்டருக்கு சாலை மிகவும் சிதலமடைந்து, குண்டும் குழியுமாக இருந்தது. இதனால், வாகனஓட்டிகள் அந்த சாலையை பயன்படுத்த முடியாமல் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வந்தனர். இந்த நிலையில், எல்லப்பாளையம் - மாமரத்துப்பாளையம் வரை புதிதாக தார் சாலை அமைக்க அரசு ரூ.1 கோடி நிதி ஒதுக்கியது. இதையடுத்து எல்லப்பாளையத்தில் தார் சாலை அமைக்கும் பணி துவக்க விழா நடந்தது.

erode

 இந்த நிகழ்ச்சிக்கு, திமுக சுற்றுச்சூழல் அணி மாவட்ட அமைப்பாளரும், எல்லப்பாளையம் பால் கூட்டுறவு சங்க தலைவருமான எல்லப்பாளையம் சிவக்குமார் தலைமை தாங்கி, சாலை அமைக்கும் பணியினை துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில், முன்னாள் கவுன்சிலர் சிவக்குமார், சங்க தலைவர் துரைசாமி, எல்லப்பாளையம் நிர்வாகிகள் மாரிமுத்து, செந்தில், சிதம்பரம், பேபி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.