காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் கல்லூரி மாணவர் தற்கொலை!

 
dead

கன்னியாகுமரி மாவட்டம் மயிலாடி அருகே காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் மயிலாடி அருகே உள்ள பெருமாள்புரம் பகுதியை சேர்ந்தவர் சுயம்புலிங்கம். இவரது சுமன் (19).  இவர் நாகர்கோவிலில் உள்ள கல்லூரியில் பி.ஏ. இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில், சுமன், பெண் ஒருவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. அந்த பெண்ணை திருமணம் செய்து வைக்கும்படி தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். 

kumari

அப்போது, படித்து முடித்து நல்ல வேலைக்கு சென்ற பின்னர் காதலிக்கும் பெண்ணை திருமணம் செய்து வைத்தாக கூறியுள்ளனர். இதனால் சுமன் மனமுடைந்து காணப்பட்டு வந்துள்ளார். இந்த நிலையில், நேற்று இரவு வீட்டின் பின்புறம் உள்ள மற்றொரு வீட்டிற்கு தூங்க சென்றுள்ளார். இன்று காலை நீண்ட நேரம் ஆகியும் அவர் வெளியே வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த பெற்றோர் பழைய வீட்டிற்கு சென்று பார்த்தபோது சுமன் உயிரிழந்த நிலையில் சடலமாக கிடந்தார்.

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவர்கள், இதுகுறித்து  அஞ்சுகிராமம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, மாணவர் சுமனின் உடலை கைப்பற்றி  குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து, அவரது இறப்புக்கான காரணம்  குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.