கொரோனா பரவல் எதிரொலி... கோவையில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதித்து ஆட்சியர் உத்தரவு!

 
cbe collector

கோவை மாவட்டத்தில் அதிகரித்து வரும் கொரோனா நோய் தொற்றினை கட்டுப்படுத்த கூடுதல் கட்டுப்பாடுகள் விதித்து ஆட்சியர் சமீரன் உத்தரவிட்டு உள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில், கொரோனா நோய் தொற்று பரவலை தடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையிலும், பரவி வரும் உருமாறிய கொரோனா ஓமைக்ரான் வைரஸ் நோயை கருத்தில் கொண்டும் பொதுமக்கள் நலன் கருதியும் தமிழக அரசால் பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்து உத்தரவிட்டு உள்ளது.

cbe

தற்போது கோவை மாவட்டத்தில் நோய் தொற்று அதிகரித்து வரும் நிலையில் பொங்கல் விடுமுறை நாட்களில் கோவை மாவட்டத்திற்கு கீழ்கண்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறது. அதன்படி, அனைத்து வழிபாட்டு தலங்களிலும் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை. அனைத்து பூங்காக்கள் மற்றும் சுற்றுலா தலங்களிலும் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை.

அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கட்டாயமாக பின்பற்ற வேண்டியது அனைத்து பொதுமக்களின் கடமையாகும். மக்கள் அனைவரும் தமிழ்நாடு அரசு மற்றும் மாவட்ட நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்டு உள்ள அனைத்து கொரோனா தடுப்பு நிலையான இயக்க நடைமுறைகளை பின்பற்றி அதிகரித்து வரும் கொரோனா நோய் தொற்றை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு அளிக்குமாறு, ஆட்சியர் சமீரன்  தெரிவித்துள்ளார். 

dd

முன்னதாக, கோவை மாநகரில் உள்ள அனைத்து பூங்காக்கள், ரேஸ்கோர்ஸ்  நடைபாதை உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் மறு அறிவிப்பு வெளியாகும் வரை பொதுமக்கள் செல்ல தடை விதித்து, மாநகராட்சி ஆணையர் ராஜகோபால் சுன்கரா உத்தரவிட்டு இருந்தார்.