கோவை மாநகராட்சி பகுதியில் ஆன்லைன் மூலம் கோழி இறைச்சி, முட்டை விற்பனைக்கு அனுமதி!

 

கோவை மாநகராட்சி பகுதியில் ஆன்லைன் மூலம் கோழி இறைச்சி, முட்டை விற்பனைக்கு அனுமதி!

கோவை

கோவை மாநகராட்சி பகுதிகளில் கோழி இறைச்சி மற்றும் முட்டைகளை ஆன்லைன் மூலம் விற்பனை செய்ய அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

கோவை மாநகராட்சி பகுதிகளில் தளர்வுகளற்ற பொதுமுடக்கம் அமலில் உள்ள நிலையில், நடமாடும் வாகனங்கள் மூலம் பொதுமக்களின் வீடுகளுக்கே சென்று, காய்கறி, மளிகை மற்றும் பழங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், பாக்கெட்டுகளில் அடைத்து கோழி இறைச்சியையும் வாகனங்கள் மூலம் விற்பனை செய்ய அனுமதிக்க வேண்டுமென கோழிப்பண்ணை உரிமையாளர்கள் தரப்பில் அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது.

கோவை மாநகராட்சி பகுதியில் ஆன்லைன் மூலம் கோழி இறைச்சி, முட்டை விற்பனைக்கு அனுமதி!

இந்த நிலையில், கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கோழி இறைச்சி, முட்டை ஆகியவற்றை ஆன்லைன் மூலம் விற்பனை செய்ய மாநகராட்சி ஆணையர் குமரவேல் பாண்டியன் அனுமதி வழங்கி உத்தரவிட்டு உள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மீன்வளம் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை முதன்மை செயலாளர் உத்தரவின் பேரில், கோவை மாநகரில் கோழி இறைச்சி, முட்டைகளை ஆன்லைன் மூலம் விற்பனை செய்யவும், அவற்றை வாடிக்கையாளர்களின் வீடுகளுக்கே சென்று வழங்கிடவும் அனுமதி வழங்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.