கோவையில் இன்று முதல் புதிய கட்டுப்பாடுகள் அமல்… முக்கிய வீதிகளில் கடைகள் அடைப்பு!

 

கோவையில் இன்று முதல் புதிய கட்டுப்பாடுகள் அமல்… முக்கிய வீதிகளில் கடைகள் அடைப்பு!

கோவை

கோவையில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக இன்று கூடுதல் கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தன. இதனால் நகரின் முக்கிய பகுதிகள் வெறிச்சோடி காணப்பட்டன.

கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று மீண்டும் உயர தொடங்கியதை அடுத்து, மாவட்ட நிர்வாகம் கடந்த 2-ஆம் தேதி முதல் பல்வேறு புதிய கட்டுப்பாடுகள் விதித்து உள்ளது. அதன்படி, அத்தியாவசி பொருட்கள் தவிர்த்து, வணிக வளாகங்கள், இறைச்சி கடைகள், டாஸ்மாக் கடைகள் உணவகங்கள் உள்ளிட்டவை மாலை 5 மணி வரை மட்டும் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், ஞாயிற்றுக் கிழமைகளில் மக்கள் அதிகம் கூடும் வீதிகள் மூடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

கோவையில் இன்று முதல் புதிய கட்டுப்பாடுகள் அமல்… முக்கிய வீதிகளில் கடைகள் அடைப்பு!

அதன்படி இன்று கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட கிராஸ்கட் சாலை, 100அடி சாலை, காந்திபுரம் 5,6,7-வது தெருக்கள், ஒப்பணக்கார வீதி, ராமமூர்த்தி சாலை, சாரமேடு சாலை, ரைஸ்மில் சாலை, என்.பி. இட்டேரி சாலை, துடியலூர் ஜங்சன் பகுதிகளில் உள்ள மருந்தகம், காய்கறி கடைகளை தவிர்த்து அனைத்து கடைகளும் மூடப்பட்டன. இதனால் அந்த பகுதி மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. எனினும் குறிப்பிட்ட 12 வீதிகள் தவிர்த்து, மாநகரில் உள்ள மற்ற பகுதிகளிலும், மாவட்டத்தின் பிற பகுதிகளிலும் வழக்கம்போல் அனைத்து கடைகளும் செயல்பட்டு வருகின்றன.

இதேபோல் குறிப்பிட்ட நகரில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட பகுதிகளில் டாஸ்மாக் கடைகளில் அனைத்தும் மூடப்பட்டன. மேலும், வ.உ.சி பூங்கா, பாரதி பூங்கா உள்ளிட்ட பூங்காக்கள் மூடப்பட்டு, பொதுமக்கள் நுழையாதபடி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகினறனர். அத்துடன், ஆடி அமாவாசை, ஆடிபூரம் உள்ளிட்ட நிகழ்வுகளுக்கு கோவில்களில் தரிசனம் ரத்து செய்யப்பட்டு உள்ளதால், மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான கோவில்களில் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.