‘விவசாயிகளை ஒடுக்கும் வேளாண் சட்டம்’ இரும்பு சங்கிலியால் கட்டி விவசாயிகள் போராட்டம்!

‘விவசாயிகளை ஒடுக்கும் வேளாண் சட்டம்’ இரும்பு சங்கிலியால் கட்டி விவசாயிகள் போராட்டம்!

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக கோவையில் விவசாயிகள் போரட்டத்தில் ஈடுபட்டனர்.

மத்திய அரசு மக்களவையிலும் மாநிலங்களவையிலும் நிறைவேற்றிய வேளாண் மசோதாக்களுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதே போல தமிழகத்திலும் இந்த சட்டங்களுக்கு எதிராக பல இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இன்று காலை கோவை ஆட்சியர் அலுவலகத்தின் முன்னர் விவசாயிகள் சங்க கூட்டமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

‘விவசாயிகளை ஒடுக்கும் வேளாண் சட்டம்’ இரும்பு சங்கிலியால் கட்டி விவசாயிகள் போராட்டம்!

விவசாயிகள், சிஐடியூ உள்ளிட்ட அமைப்புகளை சேர்ந்த 150க்கும் மேற்பட்ட மக்கள் அந்த போராட்டத்தில் கலந்து கொண்டு, அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். அதுமட்டுமில்லாமல், வேளாண் சட்டம் விவசாயிகளை ஒடுக்குகிறது என்பதை உணர்த்த சட்டை அணியாமலும், இரும்பு சங்கிலியால் தங்களை கட்டியபடியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

‘விவசாயிகளை ஒடுக்கும் வேளாண் சட்டம்’ இரும்பு சங்கிலியால் கட்டி விவசாயிகள் போராட்டம்!

தகவல் அறிந்து வந்த போலீசார் அவர்களுடன் சமரச பேச்சுவார்த்தை நடத்தியும், அது தோல்வியிலேயே முடிந்ததாக கூறப்படுகிறது. மத்திய அரசின் இந்த வேளாண் சட்டங்கள், விவசாய நிலங்களை கார்ப்பரேட் நிறுவனங்கள் கையகப்படுத்தும் வகையில் இருப்பதாகவும் குற்றஞ்சாட்டினர். அப்பகுதியில் ஏஐடியூசி, தொமுச உள்ளிட்ட தொழிற்சங்கத்தினரும் ஆர்ப்பாட்டம் நடத்தியதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.