கோவையில் ரத்த தானம் வழங்கிய ஆட்சியர், காவல்துறை உயர் அதிகாரிகள்!

 

கோவையில் ரத்த தானம் வழங்கிய ஆட்சியர், காவல்துறை உயர் அதிகாரிகள்!

கோவை

கோவையில் உலக ரத்த தான தினத்தையொட்டி, மாவட்ட ஆட்சியர், மேற்கு மண்டல ஐ.ஜி, மாநகர காவல் ஆணையர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் ரத்த தானம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

உலகம் முழுவதுமுள்ள மக்களிடையே ரத்த தானம் செய்வதன் அவசியம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக ஆண்டுதோறும் ஜூன் 14ஆம் தேதி உலக ரத்த தான தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அன்றைய தினத்தில் அரசு சார்பிலும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

கோவையில் ரத்த தானம் வழங்கிய ஆட்சியர், காவல்துறை உயர் அதிகாரிகள்!

அதன்படி, இன்று கோவை மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், சுகாதாரத்துறை சார்பில் சிறப்பு ரத்த தான முகாம் நடைபெற்றது. இதில், கோவை மாவட்ட ஆட்சியர் நாகராஜன், மேற்கு மண்டல ஐ.ஜி சுதாகர், மாநகர காவல் ஆணையர் தீபக் எம்.டாமோர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம், மாநகராட்சி ஆணையர் ராஜகோபால் சுங்கரா, கோவை சரக டிஐஜி உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்துகொண்டு ரத்த தானம் வழங்கினர்.

ஒரே நேரத்தில் ஆட்சியர், ஐ.ஜி, டி.ஜ.ஜி., மாநகர காவல் ஆணையர் என மாவட்டத்தின் அனைத்து உயர் அதிகாரிகளும் பங்கேற்று ரத்த தானம் வழங்கியது, கோவை மக்களிடையே நெகிழ்ச்சியையும், ரத்த தானம் செய்து குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்தியுள்ளது.