ரூ.16 லட்சம் செலுத்தியும், உடலை தர மறுத்த தனியார் மருத்துவமனை… கோவையில் பரபரப்பு!

 

ரூ.16 லட்சம் செலுத்தியும், உடலை தர மறுத்த தனியார் மருத்துவமனை… கோவையில் பரபரப்பு!

கோவை

கோவையில் கொரோனா சிகிச்சைக்கு 16 லட்சம் வசூலித்த தனியார் மருத்துவமனை, நோயாளி இறந்த பின்பும் ரூ.4 லட்சம் கொடுத்ததால் தான் சடலத்தை தருவோம் என கூறி அடாவடி செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை குனியமுத்தூர் பகுதியை சேர்ந்தவர் அப்துல் காதர் (55). இவர் கொரோனா தொற்று காரணமாக உக்கடம் புறவழிச் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், நேற்று அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

20 நாட்களாக அவர் சிகிச்சை பெற்ற நிலையில் நாளொன்றுக்கு ரூ.1 வரை கட்டணம் வசூலித்த மருத்துவமனை நிர்வாகம் ரூ.16 லட்சம் செலுத்தியும், மீதமுள்ள 4 லட்சத்தை செலுத்தினால் தான் சடலத்தை தருவோம் என கூறியுள்ளனர்.

ரூ.16 லட்சம் செலுத்தியும், உடலை தர மறுத்த தனியார் மருத்துவமனை… கோவையில் பரபரப்பு!

இதனால் அதிர்ச்சியடைந்த அவரது உறவினர்கள், மாவட்ட நிர்வாகத்திற்கு புகார் அளித்தனர். அதன் பேரில், கோவை மாவட்ட கொரோனா தடுப்பு சிறப்பு ஐஏஎஸ் அதிகாரி சித்திக் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தனியார் மருத்துவமனை நிர்வாகத்தை எச்சரித்து சடலத்தை மீட்டு உறவினர்களிடம் வழங்கினார்.

தொடர்ந்து, அப்துல் காதரின் உடலை பெற்று சென்றனர். இதனிடையே, இந்த விவகாரம் தொடர்பாக சம்பந்தப்பட்ட மருத்துவமனை மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாவட்ட ஆட்சியர் நாகராஜன் தெரிவித்து உள்ளார்