கோவையில் தொடர் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட நபர் கைது

 

கோவையில் தொடர் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட நபர் கைது

கோவை

கோவையில் விலை உயர்ந்த இருசக்கர வாகனங்களை குறிவைத்து திருடி வந்த இளைஞரை கைதுசெய்த போலீசார், அவரிடம் இருந்து 5 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.

கோவை நகர் பகுதியில் பல்வேறு இடங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனங்கள் அடுத்தடுத்து திருடப்பட்டு வந்தன. இதுகுறித்து வந்த புகார்களின் பேரில் மாநகர காவல் ஆணையர் சுமித்சரண் தனிப்படை அமைத்து கொள்ளையர்களை பிடிக்க உத்தரவிட்டார். இதனை அடுத்து, திருட்டு சம்பவம் நடைபெற்ற பகுதிகளில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை கைப்பற்றி தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதில், கோவை செல்வபுரம் பகுதியை சேர்ந்த ஆஷிக்(28) என்பவர் வாகனங்களை திருடியது தெரியவந்தது.

கோவையில் தொடர் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட நபர் கைது

இதனை அடுத்து ஆஷிகை கைதுசெய்த போலீசார், அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில், அவர் மீது பைக் திருட்டு, கொலை முயற்சி உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரியவந்தது. மேலும், விலை உயர்ந்த இருசக்கர வாகனங்களை குறிவைத்து திருடி விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. இதனை அடுத்து அவரிடம் இருந்த 5-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்து, போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.