திண்டுக்கல் அருகே பைக் மீது கார் மோதல் - தந்தை, மகள் பலி!

 
accident

திண்டுக்கல் அருகே இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில் தந்தை, மகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே உள்ள சித்தரேவு கிராமத்தை சேர்ந்தவர் முருகன் (48). இவர் தனது மகன் புகழ், மகள் சௌமியா (8) ஆகியோருடன் இருசக்கர வாகனத்தில் உறவினர் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.  வத்தலகுண்டு - செம்பட்டி சாலையில் சாலைப்புதூர் என்ற இடத்தின் அருகே சென்றபோது, முருகன் வாகனம் மீது எதிரே வத்தலகுண்டில் இருந்து செம்பட்டி நோக்கி சென்ற கார் அதிவேகம மோதியது.

dindigul

இதில் வாகனத்தில் இருந்து தூக்கி வீசப்பட்டதில் தலையில் பலத்த காயம் அடைந்த முருகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.  படுகாயமடைந்த குழந்தைகள் புகழ் மற்றும் சௌமியா ஆகியோரை பட்டிவீரன்பட்டி போலீசார் மீட்டு வத்தலக்குண்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மருத்துவர்கள் சிகிச்சை பலனின்றி சௌமியா உயிரிழந்தார்.

மேலும், படுகாயமடைந்த புகழ் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்தில் படுகாயமடைந்த செங்கட்டாம்பட்டியை சேர்ந்த ஓட்டுநர் ராம்கி (37)  வத்தலக்குண்டு அரசு  மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.  இந்த விபத்து குறித்து பட்டிவீரன்பட்டி போலீசார்  வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.