நாகாலாந்து சிறுமியை கர்ப்பமாக்கிய சகோதரர் போக்சோ சட்டத்தில் கைது!

 
widow rape by neigbour

கன்னியாகுமரி அருகே  17 வயது நாகாலாந்து சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கியதாக, அவரது சகோதரனை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். 

நாகாலாந்து மாநிலத்தை சேர்ந்தவர் போங்குவாண்ட்(34). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில், அவர் கன்னியாகுமரி மாவட்டம் நித்திரவிளை காஞ்சாம்புரத்தில் வாடகை வீட்டில் தங்கி, அங்குள்ள உணவகம் ஒன்றில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு போங்குவாண்ட், 17 வயது சிறுமி ஒருவருக்கு உடல்நல குறைவு என கூறி கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார். 

arrest

அங்கு அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த தனியார் மருத்துவமனை நிர்வாகத்தினர், இதுகுறித்து குளச்சல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார், சிறுமியை மீட்டு அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, போங்குவாண்ட் அவரது அண்ணன் என்பதும், அவர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கியதும் தெரியவந்தது. 

இதனை அடுத்து, தங்கையை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய போங்குவாண்ட் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த குளச்சல் மகளிர் போலீசார், அவரை கைது செய்து செய்து நீதிமன்ற காவலில் அடைத்தனர். மேலும், சிறுமியை மீட்டு சிகிச்சைக்காக குமரி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.