பெட்ரோல் - டீசல் விலையை குறைக்க வலியுறுத்தி ஈரோட்டில் பாஜகவினர் ஆர்ப்பாட்டம்

 
sars

ஈரோட்டில் பெட்ரோல் - டீசல் மீதான விலையை குறைக்காத தமிழக அரசை கண்டித்து, மொடக்குறிச்சி எம்எல்ஏ சரஸ்வதி தலைமையில் பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை குறைக்காத மாநில அரசை கண்டித்து பாஜக சார்பில் தொடர் போராட்டம் நடைபெறும் என மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்திருந்தார். அதன்படி தமிழகம் முழுவதும் பாரதிய ஜனதா கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்து வருகிறது. அதன் ஒருபகுதியாக,  ஈரோடு மாவட்ட பாஜக சார்பில் நேற்று வீரப்பன்சத்திரம் பேருந்து நிறுத்தம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

bjp

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மொடக்குறிச்சி தொகுதி பாஜக எம்எல் சரஸ்வதி தலைமை தாங்கினார்.  இதில், ஈரோடு மாவட்ட பாஜக தலைவர் சிவசுப்பிரமணியம்,  மாநில செயற்குழு உறுப்பினர் வக்கில் பழனிச்சாமி, மாவட்ட பொது செயலாளர் குணசேகரன்,  இந்து முன்னணி மாவட்ட தலைவர் ஜெகதீசன் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தின்போது போது, தமிழக அரசு பெட்ரோல் - டீசல் மீதான வாட் வரியை குறைக்க வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். மேலும், மத்திய அரசின் வரி குறைப்பு அறிவிப்பை தொடர்ந்து பாஜக ஆளும் நிலங்களிலும், காங்கிரஸ் கட்சி ஆளும் மாநிலங்களிலும் பெட்ரோல், விலையை குறைக்கும் விதமாக வரி குறைப்பு செய்யப்பட்டு உள்ளதாகவும், ஆனால் தமிழக அரசு வாட் வரியை குறைக்க மறுப்பதாகவும் குற்றம்சாட்டினர்.