அரச்சலூர் கொலை வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றக்கோரி, எஸ்.பி அலுவலகத்தில் பாஜகவினர் மனு!

 
bjp petition

ஈரோடு மாவட்டம் அரச்சலூர் அருகே பாஜக பிரமுகர் கொலை செய்யப்பட்ட வழக்கை, சிபிசிஐடிக்கு மாற்றக்கோரி மாவட்ட எஸ்.பி அலுவலகத்தில் 100-க்கும் மேற்பட்ட பாஜகவினர் கோரிக்கை மனு அளித்தனர்.

ஈரோடு மாவட்டம் வடுகபட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட நாகராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் வடிவேல்.டெய்லர். திமுக பிரமுகரான இவர், கடந்த வாரம் அக்கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார். கட்சி மாறியதால் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக கடந்த 31ஆம் தேதி வடிவேலை, அதே பகுதியை சேர்ந்த திமுக பிரமுகர் ஈஸ்வரமூர்த்தி  என்பவரால் அடித்துக் கொலை செய்யப்பட்டார்.  இதனிடையே, பாஜகவில் இணைந்ததால் வடிவேல் கொலை செய்யப்பட்டதாக கூறி பாஜக-வினர் பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனர்.

murder

இந்த நிலையில், நேற்று ஈரோடு மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் தெற்கு மாவட்ட பாஜக சார்பில் நேற்று 100-க்கும் மேற்பட்டோர் வந்து புகார் மனு  ஒன்றை அளித்தனர். அந்த மனுவில் வடிவேல் கொலை வழக்கை அரசியல் வழக்காக விசாரிக்க வேண்டும் எனவும், இந்த வழக்கில் சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர்.