சாதனை படைத்த இரண்டரை வயது குழந்தைக்கு, பாஜக எம்எல்ஏ சரஸ்வதி பாராட்டு!

 
bjp

ஈரோடு மாவட்டம் கொடுமுடி வட்டம் ஊஞ்சலூர் அருகில் இந்தியா புக் ரெக்கார்டு செய்த இரண்டரை வயது குழந்தைக்கு மொடக்குறிச்சி எம்எல்ஏ சி.சரஸ்வதி நேரில் பாராட்டு தெரிவித்தார்.  

ஈரோடு மாவட்டம் ஊஞ்சலூர் அருகே உள்ள வடக்கு புதுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர்கள் ரவிசங்கர் -  சுகுணா தம்பதியர். இவர்களின் இரண்டரை வயது மகன் கிறிஸ்வந்த். இவர் 28 வினாடிகளில் 26 ஆங்கில எழுத்துக்களை (A For Apple)பொருளுடன் சொல்லியும், 26 ஆங்கில எழுத்துக்களை வரிசையாக குறுகிய நேரத்தில் அடுக்கியும் சாதனை செய்து இந்தியா புக் ஆப் ரெக்கார்டில் பதிவு செய்து, தங்கப் பதக்கம் பெற்று உள்ளார்.

bjp

பதிவு செய்த இந்தியா புக் நிறுவனத்தார் சான்றிதழ் மற்றும் அடையாள அட்டையும் வழங்கி உள்ளனர். இந்த சாதனை செய்த குழந்தை கிறிஸ்வந்தின் சாதனையை பாராட்டும் விதமாக மொடக்குறிச்சி தொகுதி பாஜக எம்எல்ஏ டாக்டர் சி.சரஸ்வதி அவரது வீட்டுக்கு நேரில் சென்று  சால்வை அணிவித்து, பரிசு வழங்கி, வாழ்த்துக்களை தெரிவித்தார்.  

இந்த நிகழ்வில் கொடுமுடி அதிமுக வெங்கம்பூர் பேரூர் செயலாளர் நல்லசாமி மற்றும் பாஜக மாவட்ட தலைவர் எஸ். ஏ. சிவசுப்பிரமணியன் மற்றும் தோழமை கட்சி நிர்வாகிகள், மருத்துவர் கார்த்திக், உள்ளூர் பொதுமக்கள் உடன் இருந்து வாழ்த்து தெரிவித்தனர்.