குடும்ப தகராறில் மனைவியை குத்திக்கொன்ற வங்கி ஊழியர்!

 
girl murder her family by poison

விருதுநகரில் குடும்ப தகராறில் மனைவியை கத்தியால் கொன்ற வங்கி ஊழியர், காவல் நிலையத்தில் சரணடைந்தார். 

விருதுநகர்  என்ஜிஓ காலனி கம்பர் தெருவில் வசித்து வருபவர் கண்ணன். இவர் திருமங்கலத்தில் உள்ள பொதுத்துறை வங்கியில் எழுத்தராக பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி கற்கபகம். இவர்களுக்கு 2 பிள்ளைகள் உள்ளனர்.  இந்த நிலையில், கற்பகம் வேறு ஒரு நபருடன் அடிக்கடி செல்போனில் பேசி வந்துள்ளார்.

virudhunagar ttn

இதனை கண்ணன் கண்டித்தும் கைவிடவில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில், இன்று காலை இதுதொடர்பாக கணவன் - மனைவி இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது. இதில் ஆத்திரமடைந்த கண்ணன், வீட்டில் இருந்த கத்தியை எடுத்து கற்பகத்தை சரமாரியாக குத்தினார். இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தொடர்ந்து அவர், பாண்டியன் நகர் காவல் நிலையத்திற்கு சென்று போலீசாரிடம் சரணடைந்தார். அவர் அளித்த தகவலின் பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கற்பகத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து கண்ணனை கைதுசெய்து, அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.