அந்தியூரில் மாணவியை கர்ப்பமாக்கிய டுடோரியல் ஆசிரியர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது!

 
arrest

ஈரோடு மாவட்டம் அந்தியூரில் பயிற்சிக்கு வந்த மாணவியை கர்ப்பமாக்கிய டுடோரியல் ஆசிரியர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் தேர் வீதியை சேர்ந்தவர் லோகநாதன் (38). இவர் அந்தியூரில் டுடோரியல் சென்டர் நடத்தி வந்தார். இவரது மையத்துக்கு, தனித்தேர்வர் பயிற்சிக்கு வந்த மாணவி ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இருவரும் நெருங்கி பழகிய நிலையில், ஆசை வார்த்தை கூறி அவர் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதில் அந்த மாணவி கர்ப்பமாகினார். 

rape

இதுகுறித்து மாணவி தெரிவித்த தகவலின் பேரில் அவரது பெற்றோர் பவானி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில், கடந்த மாதம் 4-ஆம் தேதி லோகநாதன் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டார். இதையடுத்து, அவர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இதனிடையே, லோகநாதனை குண்டர் சட்டத்தில் கைதுசெய்ய மாவட்ட எஸ்.பி. சசிமோகன் கலெக்டருக்கு பரிந்துரை செய்தார்.

இதனை ஏற்று ஆட்சியர் கிருஷ்ணன் உண்ணி, லோகநாதனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். இதற்கான உத்தரவு நகலை போலீசார் கோவையில் உள்ள சிறையில் வழங்கியதை அடுத்து, அவர் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார்.