கோவை அருகே அரசுப்பேருந்து மோதி இளைஞர் பலி!

 
accident

கோவை மாவட்டம் சூலூரில் இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்த இளைஞர் மீது பேருந்து ஏறியதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

திண்டுக்கல்லை சேர்ந்தவர் மாரிமுத்து (25). இவர் கோவை மாவட்டம் கோவில்பாளையத்தில் தங்கி, அங்குள்ள பழக்கடை ஒன்றில் பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில், மாரிமுத்து தனது சொந்த ஊருக்கு சென்றுவிட்டு, புதன்கிழமை இருசக்கர வாகனத்தில் கோவைக்கு திரும்பி கொண்டிருந்தார். சூலூர் ரங்கநாதபுரம் பிரிவு அருகே வந்தபோது, எதிர்பாராத விதமாக சாலையில் இருந்த பள்ளத்தில் வேகமாக வாகனம் இறங்கியது. இதில் மாரிமுத்து வாகனத்தில் இருந்து நிலை தடுமாறி சாலையில் விழுந்தார். அப்போது, பின்னால் வந்த அரசுப்பேருந்து ஒன்று அவர் மீது ஏறியது. இதில் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

accident

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சூலூர் போலீசார், மாரிமுத்துவின்  உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த நிலையில், மாரிமுத்து பேருந்து சக்கரத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் குறித்த பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் சமுக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.