திருமணத்திற்கு முதல் நாளில் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை... திண்டுக்கல் அருகே சோகம்!

 
suicide

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே திருமணத்திற்கு முதல் நாளில் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள நீலமலைக்கோட்டை குமாரபாளையம் பகுதியை சேர்ந்தவர் அர்ஜுனன்(24). பொறியியல் பட்டதாரியான இவர் சொந்தமாக தொழில் செய்து வந்துள்ளார். இந்த நிலையில், அர்ஜுனனுக்கு அவரது பெற்றோர் பெண் பார்த்து, திருமணம் நிச்சயம் செய்துள்ளனர். இன்று செப்டம்பர் 1ஆம் தேதி அவருக்கு திருமணம் நடைபெற இருந்தது. இதனை முன்னிட்டு நேற்று மணமகள் குடும்பத்தினர், மாப்பிள்ளை அழைப்பிற்காக அர்ஜுனனின் வீட்டிற்கு சென்றுள்ளனர். அப்போது, அர்ஜுனன் தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து  கொண்ட நிலையில் சடலமாக தொங்கினார்.

dindigul

இதனை இரு வீட்டாரும் அதிர்ச்சியடைந்தனர். தகவல் அறிந்து வந்த ஒட்டன்சத்திரம் போலீசார், அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து, அர்ஜுனன் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருமணத்திற்கு முதல் நாளில் புது மாப்பிள்ளை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.