தங்கை மகளின் மஞ்சள் நீராட்டு விழாவிற்கு மனைவி வராததால் இளைஞர் தற்கொலை... பண்ருட்டி அருகே சோகம்!

 
suicide

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே திருமணமான ஒரே ஆண்டில் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள பேர்பெரியான்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் இளங்குமார்(34). விவசாய தொழிலாளி. இவருக்கு கடந்த ஓராண்டுக்கு முன் ராஜேஸ்வரி என்பருடன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு குழந்தை இல்லை. இந்த நிலையில் கணவன் - மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

panruti

இதனால் கடந்த சில நாட்களுக்கு முன் ராஜேஸ்வரி கணவரிடம் கோபித்துக்கொண்டு பூதம்பாடியில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டார்.இந்த நிலையில், நேற்று முன்தினம் இளங்குமாரின் தங்கை மகளுக்கு மஞ்சள் நீராட்டு விழா நடைபெற்றுள்ளது. இதற்கு இளங்குமார் குடும்பத்தினர் அழைத்தபோதும், அவரது மனைவி ராஜேஸ்வரி வரவில்லை என கூறப்படுகிறது. இதனால் மனவேதனை அடைந்த இளங்குமார், அன்றிவு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தகவலின் பேரில் முத்தாண்டிக்குப்பம் போலீசார், அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். திருமணமான ஒரே ஆண்டில் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.