காதல் திருமணம் செய்த 2 மாதத்தில் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை... கிருஷ்ணகிரி அருகே சோகம்!

 
 suicide

கிருஷ்ணகிரி அருகே காதல் திருமணம் செய்த 2 மாதத்தில் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் பாரூர் அருகே உள்ள குன்னிகோட்டை கிராமத்தை சேர்ந்தவர் மாரியப்பன். இவரது மகன் சத்யமூர்த்தி (22). கூலி தொழிலாளி. இவர் கீர்த்தி என்பவரை காதலித்து வந்த நிலையில், கடந்த 2 மாதங்களுக்கு முன் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பின் இருவரும் குன்னிக்கோட்டையில் வசித்து வந்தனர். இந்த நிலையில், கணவன் - மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதில் சத்யமூர்த்தி மனமுடைந்து காணப்பட்டு வந்துள்ளார்.

dead

இந்த நிலையில், சம்பவத்தன்று வாழ்க்கையில் விரக்தி அடைந்த சத்யமூர்த்தி, வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த பாரூர் போலீசார், அவரது உடலை  மீட்டு பிரேத பரிசோதனைக்காக காவேரிப்பட்டணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து அவரது தந்தை மாரியப்பன் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காதல் திருமணம் செய்த 2 மாதத்தில் இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.