பென்னாகரம் அருகே இளைஞர் மர்மமான முறையில் உயிரிழப்பு - போலீசார் விசாரணை!

 
dead

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே இளைஞர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகேயுள்ள கூத்தப்பாடி மடம் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தன். இவரது மகன் மிதுன்குமார் (28). இவர் ஒகேனக்கல் குடிநீர் திட்ட வடிகால் வாரியத்தில் தற்காலிக பணியாளராக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில், நேற்று முன்தினம் மிதுன்குமார் பென்னாகரம் அடுத்த பெரிய தோட்டம்புதூர் பகுதியில் உள்ள மரத்தில் தூக்கிட்ட நிலையில் சடலமாக தொங்கினார். இதனை கண்ட அந்த பகுதி பொதுமக்கள், பென்னாகரம் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். அதன் பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மிதுன்குமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பென்னாகரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

pennagaram

மேலும், இந்த சம்பவம் குறித்து மிதுன்குமாரின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் பென்னாகரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மிதுன்குமார் காதல் தோல்வியால் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலை செய்யப்பட்டு மரத்தில் தொங்கவிடப்பட்டாரா? என தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.