தூத்துக்குடி அருகே இளைஞர் தலை துண்டித்து படுகொலை - போலீசார் விசாரணை!

 
tuti

தூத்துக்குடி அருகே மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் இளைஞர் தலை துண்டித்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

தூத்துக்குடி அடுத்த தட்டப்பாறை அருகே உள்ள வடக்கு சிலுக்கன்பட்டியில் கோழி பண்ணை பகுதியில் நேற்று காலை இளைஞர் ஒருவர் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் சடலமாக கிடந்தார். இது குறித்து அந்த பகுதி பொதுமக்கள் தட்டப்பாறை போலீசாருக்கு தகவல் அளித்தனர். அதன் பேரில், ஏடிஎஸ்பி சந்திஷ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து இளைஞரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

murder

மேலும், இந்த சம்பவம் தொடர்பாக தட்டப்பாறை போலீசார் வழக்குப்பதிவு செய்து உயிரிழந்த நபர் யார்? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது, அவர் மகிழ்ச்சிபுரத்தை சேர்ந்த சின்னதுரை(32) என்பது தெரியவந்தது. மீன் வியாபாரம் செய்து வரும் இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் ஒரு மகன் உள்ளது தெரியவந்தது. மேலும், கொலை நடைபெற்ற இடத்தில் மதுபாட்டில்கள் கிடந்ததால் மதுபோதையில் கொலை நடைபெற்றதா? அல்லது முன்விரோதம் காரணமா? என போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.