பெற்றோர் பைக் வாங்கி தராததால் விரக்தியில் இளைஞர் தற்கொலை... கிருஷ்ணகிரி அருகே சோகம்!

 
poison

கிருஷ்ணகிரி அருகே  பெற்றோர் இருசக்கர வாகனம் வாங்கி தராததால் இளைஞர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள அண்ணா நகரில் வசித்து வருபவர் பிரவீன் குமார். இவர் பெற்றோரிடம் இருசக்கர வாகனம் வாங்கி தரும்படி தொடர்ந்து கேட்டு வந்துள்ளார். ஆனால் அவர்கள் தற்போது தங்களிடம் பணம் இல்லை என்றும், பின்னர் இருசக்கர வாகனம் வாங்கி தருவதாகவும் கூறி உள்ளனர்.  இதனால் பிரவீன்குமார் மனமுடைந்து காணப்பட்டு வந்துள்ளார். இந்த நிலையில், வாழ்க்கையில் விரக்தியடைந்த அவர் வீட்டில் இருந்த விஷத்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார். உறவினர்கள் அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

salem

பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பிரவீன் குமார் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் தேன்கனிக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். பெற்றோர் இருசக்கர வாகனம் வாங்கி தராததால் இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.