ராணுவத்தில் சேர முடியாத விரக்தியில் இளைஞர் தற்கொலை... நெல்லை அருகே சோகம்!

 
nellai

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே ராணுவத்தில் சேர முடியாத விரக்தியில் இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகேயுள்ள புதுக்குடி பகுதியை சேர்ந்தவர் பிச்சையா கார்த்திகேயன். இவரது மகன் சதீஷ் (23). இவர் ராணுவத்தில் சேருவதற்காக பயிற்சி எடுத்து வந்துள்ளார். இந்த நிலையில், சமீபத்தில் அக்னிபாத் திட்டத்தின் கீழ் ராணுவத்தில் சேர விண்ணப்பித்து உள்ளார். அப்போது, உடல் மற்றும் எழுத்துத்தேர்வில் சதீஷ் தேர்ச்சி பெற்றுள்ளார். ஆனால் மருத்துவ பரிசோதனையில், பார்வை குறைபாடு காரணமாக நிராகரிக்கப்பட்டு உள்ளார். ராணுவத்தில் சேர முடியாததால் சதிஷ் மனவேதனையுடன் காணப்பட்டு வந்துள்ளார்.

nellai gh

இந்த நிலையில், சம்பவத்தன்று இரவு வீட்டில் தனியாக இருந்த அவர் துக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலின் பேரில் வீரவநல்லூர் போலீசார், அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். ராணுவத்தில் சேர முடியாத விரக்தியில் இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.