ராணிப்பேட்டை அருகே இளைஞர் வெட்டிக்கொலை - போலீசார் விசாரணை!

 
murder

ராணிப்பேட்டை மாவட்டம் திமிரி அருகே இளைஞர் வெட்டிக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ராணிப்பேட்டை  மாவட்டம் திமிரி பேரூராட்சிக்கு உட்பட்ட வேலாயுதபாணி தெருவை சேர்ந்தவர் கதிர்வேல். இவரது மகன் கலையரசன்(23). இவரது குடும்பத்திற்கும், அதே பகுதியை சேர்ந்த தினகரன் குடும்பத்தினருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்த நிலையில், நேற்று மதியம் கலையரசன் தனது நண்பர்கள் கோபி, கார்த்தி ஆகியோருடன் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். திமிரி ராமப்பாளையம் சாலையில் சென்றபோது, அவர்களை தினகரன், அவரது மகன் அசோக், தினேஷ் ஆகியோர் வழிமறித்து கத்தியால் சரமாரியாக வெட்டி உள்ளனர்.

ranipettai

இதில் கலையரசன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். கோபி, கார்த்தி ஆகியோர் பலத்த காயமடைந்தனர். தகவல் அறிந்த திமிரி போலீசார், காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக வேலுர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  மேலும், உயிரிழந்த கலையரசினின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து திமிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து, கொலையாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.