திண்டுக்கல்லில் போலி முகநூல் கணக்கு மூலம் அவதூறு பரப்பிய இளைஞர் கைது!

 
dgl

திண்டுக்கல் அருகே போலி முகநூல் கணக்கு மூலம் அவதூறு பரப்பிய விருதுநகரை சேர்ந்த இளைஞரை, திண்டுக்கல் மாவட்ட சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே உள்ள சி.புதூரை சேர்ந்தவர் கருப்புசாமி (47). இவரது பெயர், புகைப்படம் மற்றும்  தொலைபேசி எண்ணை பயன்படுத்தி விருதுநகர் மாவட்டம் வெள்ளுரை  சேர்ந்த ராஜேஸ்வரன் (29) என்பவர் போலியாக முகநூல் கணக்கு ஒன்றை துவங்கி, அதில் தொடர்ந்து அரசியல் பிரமுகர்கள் தொடர்பான அவதூறு செய்திகளை பரப்பி வந்துள்ளார். 

arrest

இதனை அறிந்த கருப்பசாமி, திண்டுக்கல் மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில், திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் அறிவுறுத்தலின் படி,  மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலைய ஆய்வாளர் ரேணுகாதேவி, சார்பு ஆய்வாளர் அருண் நாராயணன் ஆகியோர் போலியான முகநூல் கணக்கை முடக்கி, விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து, நேற்று மோசடியில் ஈடுபட்ட ராஜேஸ்வரனை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.