வந்தவாசி அருகே பைக்கில் கஞ்சா கடத்திய இளைஞர் கைது... 1.100 கிலோ கஞ்சா பறிமுதல்!

 
vanadavasi

வந்தவாசி அருகே இருசக்கர வாகனத்தில் கஞ்சா கடத்திய இளைஞரை கைதுசெய்த போலீசார், அவரிடம் இருந்து 1.100 கிலோ கஞ்சா மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே உள்ள விழுதுபட்டு கூட்டுசாலை பகுதியில் நேற்று வந்தவாசி தெற்கு காவல் நிலைய போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞரை சந்தேகத்தின் பேரில் போலீசார் மறித்து சோதனையிட்டனர். அப்போது, அவர் இருசக்கர வாகனத்தில் கஞ்சாவை கடத்திச் சென்றது தெரிய வந்தது.

cannabis

இதனை அடுத்து, அவரிடம் இருந்து 1 கிலோ 100 கிராம் அளவிலான கஞ்சா மற்றும் கஞ்சா கடத்தலுக்கு பயன்படுத்திய இருசக்கர வாகனம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், கஞ்சாவை விற்பனைக்காக கடத்தியது தொடர்பாக வந்தவாசி அடுத்த விழுதுபட்டு பகுதியை சேர்ந்த சௌந்தரராஜன்(24) என்பவரை கைது செய்தனர். தொடர்ந்து, அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.