திண்டுக்கல் அருகே லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த இளைஞர் கைது... 5,405 லாட்டரி சீட்டுகள், ரூ.18,220 பணம் பறிமுதல்

 
dgl

திண்டுக்கல் அருகே தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த இளைஞரை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து 5,405 லாட்டரி சீட்டுகள் மற்றும் ரூ.18,220 பணத்தை பறிமுதல் செய்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சட்ட விரோதமாக தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் அறிவுறுத்தலின்படி பட்டிவீரன்பட்டி காவல் உதவி ஆய்வாளர் முத்தையா தலைமையிலான போலீசார், பட்டிவீரன்பட்டி பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பட்டிவீரன்பட்டி அண்ணா நகரில் வேடசந்தூரை சேர்ந்த மகேந்திர பிரசாத்(23) என்பவர் நடத்தி வந்த பெட்டிக்கடையில் சந்தேகத்தின் பெயரில் போலீசார் சோதனை செய்தனர்.

lottery

அப்போது கடையில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை மகேந்திர பிரசாத்தை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து  5,405 லாட்டரி சீட்டுகள் மற்றும்ரூ.18,220 ரொக்கப்பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, கைதான மகேந்திர பிரசாத் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.