பழனியில் வீட்டின் பூட்டை உடைத்து நகை திருடிய இளைஞர் கைது... ரூ.6 லட்சம் மதிப்பிலான நகைகள் பறிமுதல்!

 
palani

பழனியில் வீட்டின் பூட்டை உடைத்து நகைகளை திருடிய கொள்ளையனை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து ரூ.6 லட்சம் மதிப்பிலான தங்கம் மற்றும் வைர நகைகளை பறிமுதல் செய்தனர்.
 
திண்டுக்கல் மாவட்டம் பழனி நேதாஜி நகரை சேர்ந்த ரங்கநாதன். இவர் கடந்த செப்டம்பர் 25ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் சென்றிருந்தார். பின்னர் மீண்டும் 27ஆம் தேதி வீட்டிற்கு வந்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 22 பவுன் நகை, ஒரு வைர மோதிரம் மற்றும் செல்போன் திருட்டு போயிருந்தது தெரிய வந்தது. இது குறித்து ரங்கநாதன் அளித்த புகாரின் அடிப்படையில் பழனி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

palani town

இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் உத்தரவின் பேரில், பழனி டிஎஸ்பி சிவசக்தி மேற்பார்வையில், பழனி காவல் ஆய்வாளர் உதயகுமார் தலைமையில் போலீசார் குற்றவாளியை தேடி வந்தனர். இந்த நிலையில் கொள்ளையில் ஈடுபட்ட மதுரை எஸ்.எஸ் காலனியை சேர்ந்த சுரேஷ்குமார் என்பவரை போலீசார் இன்று கைது செய்தனர். மேலும், அவரிடமிருந்து ரூ. 6 லட்சம் மதிப்புள்ள திருட்டு போன தங்க மற்றும் வைர நகைகள், செல்போன்  மீட்கப்பட்டது.