ஈரோட்டில் இளம்பெண் கழுத்தை நெரித்துக் கொலை... சொத்து தகராறில் கணவர் வெறிச்செயல்!

 
murder

ஈரோட்டில் வீட்டில் தனியாக இருந்த பெண் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், சொத்து தகராறில் அவரது கணவரே கழுத்தை நெரித்துக் கொன்றது அம்பலமாகி உள்ளது.

ஈரோடு சூளை ஈ.பி.பி.நகர் பி.பி.கார்டனை சேர்ந்தவர் சுரேஷ்(40). தனியார் மில் காசாளர். இவரது மனைவி புவனேஸ்வரி (38). இத்தம்பதிக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 6 மாதங்களுக்கு முன்பு சுரேஷ், மனைவியை பிரிந்து தனது சகோதரி வீட்டில் வசித்து வந்தார். புவனேஸ்வரி, குழந்தைகளுடன் ஈ.பி.பி. நகரில் வசித்து வந்தார். இந்த நிலையில், கடந்த சனிக்கிழமை குழந்தைகள் பள்ளிக்கு சென்ற நிலையில் வீட்டில் தனியாக இருந்த புவனேஸ்வரி கழுத்து நெரித்து கொல்லப்பட்ட நிலையில் சடலமாக கிடந்தார்.

தகவலின் பேரில் டவுன் டிஎஸ்பி ஆனந்தகுமார் மற்றும் வீரப்பன்சத்திரம் போலீசார், அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, இந்த கொள்ளை சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில், புவனேஸ்வரிக்கும், பெயிண்டர் ஒருவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்ததும், இதுகுறித்து தகராறில் கணவர் சுரேஷ் பிரிந்து சென்றதும் தெரியவந்தது. இதனால் சந்தேகத்தின் பேரில் புவனேஸ்வரியின் கணவர் சுரேஷ், பெயிண்டர் ஆகியோரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதில், புவனேஸ்வரியை அவரது கணவர் சுரேஷ் கழுத்தை நெரித்துக் கொன்றது தெரியவந்தது. 

murder

மேலும் போலீசாரின் விசாரணையில், கடந்த 2 ஆண்டிற்கு முன்பு சுரேஷ் வீட்டுக்கு பெயிண்ட் அடிக்க வந்த இகளைஞருடன், புவனேஸ்வரிக்கு பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இதனை அறிந்த சுரேஷ், மனைவியை பிரிந்து சகோதரி வீட்டில் வசித்து வந்துள்ளார். முன்னதாக புவனேஸ்வரி குடியிருக்கும் வீட்டை, அவரது பெயருக்கு சுரேஷ் வாங்கி கொடுத்துள்ளார். தற்போது அவர் வேறு நபருடன் கள்ளத்தொடர்பில் உள்ளதால், வீட்டை தனது பெயருக்கு மாற்றி தரும்படி கேட்டுள்ளார். ஆனால் புவனேஸ்வரி மறுத்துவிட்டார். இதனால் அவர் மீது சுரேஷ் ஆத்திரத்தில் இருந்துள்ளார். 

இந்த நிலையில், சனிக்கிழமை மதியம் புவனேஸ்வரியின் வீட்டிற்கு சென்ற சுரேஷ், வீட்டை தனது பெயருக்கு மாற்றி தரும்படி கேட்ட நிலையில், அதற்கு புவனேஸ்வரி மறுத்துள்ளார். அப்போது, இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்ட நிலையில், ஆத்திரமடைந்த சுரேஷ் துப்பட்டாவால் புவனேஸ்வரியை கழுத்தை நெரித்து கொலை செய்தது தெரியவந்தது. இதனை அடுத்து,  போலீசார் சுரேசை கைது செய்தனர்