காதல் திருமணம் செய்த 6 மாதத்தில் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை!

 
suicide

குமரி மாவட்டம் நாகர்கோவிலில் காதல் திருமணம் செய்த 6 மாதத்தில் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அடுத்த தெங்கன்குழி விளை பகுதியை சேர்ந்தவர் மகேஷ்குமார் (33). கட்டிட தொழிலாளி. இவர் கடந்த 6 மாதங்களுக்கு முன் சரஸ்வதி (21) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின் கணவன் - மனைவி இருவரும் நாகர்கோவில் வாத்தியார் விளை பகுதியில் வசித்து வந்தனர். இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் சரஸ்வதி, வெளியூரில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்றிருந்தார். இதனால் வீட்டில் மகேஷ்குமார் மட்டும் தனியாக இருந்தார். தொடர்ந்து நேற்று காலை சரஸ்வதி வீட்டிற்கு வந்தபோது கதவு உட்புறமாக பூட்டப்பட்டிருந்தது.

kumari gh

இதனால் சரஸ்வதி ஜன்னல் வழியாக எட்டி பார்த்தபோது மகேஷ்குமார் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் சடலமாக தொங்கினார். இதனால் அதிர்ச்சியடைந்த சரஸ்வதி, இது குறித்து வடசேரி காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தார். அதன் பேரில், போலீசார் மகேஷ்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.