கணவர் இறந்த வேதனையில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை... திருச்சியில் சோகம்!

 
suicide

திருச்சி உறையூரில் கணவர் இறந்த வேதனையில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

திருச்சி உறையூர் சவேரியார் கோவில் தெருவை சேர்ந்தவர் ஹரிஹஷன். இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ஷெரின் பானு(22) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு மூன்றரை வயதில் ஆண் குழந்தை உள்ளது. இந்த நிலையில், கணவன் - மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதில் மனமுடைந்த ஹரிஹஷன் கடந்த மாதம் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கணவர் இறந்ததால் ஷெரின் பானு மனவேதனையில் இருந்து வந்துள்ளார்.

dead body

இந்த நிலையில், கடந்த சில நாட்களாக ஷெரின்பானு, உறையூர் பகுதியில் உள்ள தனது பாட்டி வீட்டில் தங்கி இருந்துள்ளார். இந்த நிலையில், வாழ்க்கையில் விரக்தியடைந்த அவர் நேற்று முன்தினம் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலின் பேரில் உறையூர் போலீசார், அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். கணவர் இறந்த வேதனையில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.