திருமணமான 3 ஆண்டுகளில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை... உடையார்பாளையத்தில் சோகம்!

 
suicide

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையத்தில் திருமணமான 3 ஆண்டுகளில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது

கடலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் கமலாதேவி (24). இவருக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் பகுதியை சேர்ந்த உறவினர் தினேஷ் (34) என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒன்றரை வயதில் ஆண் குழந்தை உள்ளது. சென்னையில் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்த தினேஷ், கடந்த சில மாதங்களாக வீட்டில் இருந்து வந்துள்ளார். அப்போது, கணவன் - மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு உள்ளது. இதில் கமலாதேவி மனமுடைந்து காணப்பட்டு வந்துள்ளார்.

ariyalur

இந்த நிலையில், நேற்று வீட்டில் யாரும் இல்லாதபோது அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த கமலாதேவியின் பெற்றோர் அவரது மரணத்தில் மர்மம் உள்ளதாக கூறி, உடையார்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில், போலீசார் கமலாதேவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இந்த சம்பவம் குறித்து உடையார்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும், திருமணமான 3 ஆண்டுகளில் கமலாதேவி தற்கொலை செய்து கொண்டதால் இந்த சம்பவம் குறித்து  ஆர்டிஓ விசாரணை மேற்கொண்டு வருகிறார்.