திருமணமான 11 மாதத்தில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை... தூத்துக்குடியில் சோகம்!

 
suicide

தூத்துக்குடியில் திருமணமான 11 மாதத்தில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தூத்துக்குடி லயன்ஸ் டவுன் 7-வது தெருவை சேர்ந்தவர் பிரசாந்த் விக்டோரியா. இவர் வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கும், அனிசியா(25) என்பவருக்கும் கடந்த 11 மாதங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பின் பிரசாந்த் விக்டோரியா வெளிநாட்டிற்கு சென்ற நிலையில், அனிசியா தனது மாமியார் வீட்டில் வசித்து வந்தார். இந்த நிலையில், பிரசாந்த் விக்டோரியா பொங்கல் பண்டிகைக்காக கடந்த சில நாட்களுக்கு முன் தூத்துக்குடிக்கு வந்திருந்தார். அப்போது, கணவன் - மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதில் அனிசியா மனமுடைந்து காணப்பட்டு வந்துள்ளார். இந்த நிலையில், பிரசாந்த் விக்டோரியா வெளியே புறப்பட்டு சென்ற நிலையில், வீட்டில் தனியாக இருந்த அனிசியா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

tuti gh

இது குறித்து தகவல் அறிந்த தூத்துக்குடி தென்பாகம் போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று அனிசியாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து அனிசியாவின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அனிசியா தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர். மேலும், திருமணமான 11 மாதத்தில் அனிசியா தற்கொலை செய்து கொண்டதால் இந்த சம்பவம் குறித்து வருவாய் கோட்டாட்சியர் விசாரணைக்கு பரிந்துரைக்கப்பட்டு உள்ளது.