உரம் தெளித்தபோது இளம்பெண் மயங்கி விழுந்து உயிரிழப்பு... பெரம்பலூர் அருகே சோகம்!

 
dead

பெரம்பலூர் அருகே வயலில் உரம் தெளித்த இளம்பெண் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

பெரம்பலூர் மாவட்டம் கவுள்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் அன்பழகன். விவசாயி. இவரது மகள் ரேணுகா(20).  12ஆம் வகுப்பு வரை படித்துள்ள இவர் குடும்பத்தினருக்கு உதவியாக விவசாய பணிகளில் ஈடுபட்டு வந்தார். இந்த நிலையில், நேற்று முன்தினம் மாலை ரேணுகா தங்களுக்கு சொந்தமான நெல் வயலில் உரம் தெளிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, திடீரென அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு, மயங்கி விழுந்துள்ளார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர், அவரை மீட்டு சிறுவாச்சூர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று ரேணுகா பரிதாபமாக உயிரிழந்தார்.

perambalur gh

தகவலின் பேரில் பெரம்பலூர் போலீசார், ரேணுகாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து ரேணுகாவின் தந்தை அன்பழகன் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். உரம் தெளித்த இளம்பெண் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.