கிரைண்டரில் மாவு அரைத்தபோது மின்சாரம் தாக்கி இளம்பெண் பலி... திருச்சி அருகே சோகம்!

 
dead

திருச்சி மாவட்டம் மருங்காபுரி அருகே  கிரைண்டரில் மாவு அரைத்தபோது மின்சாரம் தாக்கி இளம்பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.

திருச்சி மாவட்டம் மருங்காபுரி அருகே உள்ள வளநாடு ஆத்துப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சங்கர். இவரத மனைவி ராதிகா(26). இவர் நேற்று வீட்டில் உள்ள கிரைண்டரில் மாவு அரைத்துள்ளார். அப்போது, கிரைண்டரில் திடீரென பழுது ஏற்பட்டதால், ராதிகா அதனை சரிசெய்ய முயன்றுள்ளார். அப்போது, எதிர்பாராத விதமாக அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் பலத்த காயமடைந்த ராதிகாவை, உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் மீட்டு மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

valanadu

அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ராதிகா ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து ராதிகாவின் பெற்றோர் வளநாடு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மின்சாரம் தாக்கி இளம்பெண் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.