ஆத்தூர் அருகே இளம்பெண் மர்மமான முறையில் உயிரிழப்பு - போலீசார் விசாரணை!

 
dead body

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே இளம்பெண் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள கல்லாநத்தம் பகுதியை சேர்ந்தவர் மணிமாறன். பெயிண்டர். இவருக்கு, கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பாக்கம்பாடியை சேர்ந்த மாதையன் மகள் சரண்யா என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இத்தம்பதிக்கு 2 பிள்ளைகள் உள்ளனர். இந்த நிலையில், கணவன் - மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இது தொடர்பாக கடந்த மாதம் சரண்யா, ஆத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

salem

அப்போது, போலீசார் இருவரையும் அழைத்து பேசி சமரசம் செய்து வைத்துள்ளனர். இதனை தொடர்ந்து, இருவரும் ஒன்றாக சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளனர். இந்த நிலையில், இன்று காலை சரண்யா வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த சரண்யாவின் தந்தை மாதையன், தனது மகளின் மரணத்தில் சந்தேகம் உள்ளதாக கூறி ஆத்தூர் தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

அதன் பேரில், போலீசார் சரண்யாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்த வழக்குப்பதிவு செய்து சரண்யா குடும்ப தகராறில் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா? என தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.