திருமணத்தில் விருப்பம் இல்லாததால் இளம்பெண் தற்கொலை... மதுரை அருகே சோகம்!

 
poison

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் திருமணத்தில் விருப்பம் இல்லாததால் இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள கீழஉரப்பனூர் பகுதியை சேர்ந்தவர் முருகன். தொழிலாளி. இவரது மகள் அபிராமி. 12ஆம் வகுப்பு முடித்துள்ள இவர், கல்லூரியில் சேர முயற்சித்து வந்தார். இந்த நிலையில், பெற்றோர் அபிராமிக்கு உறவினருடன் திருமணம் செய்ய ஏற்பாடு செய்து வந்துள்ளனர். ஆனால் அபிராமிக்கு திருமணத்தில் விருப்பம் இல்லை என கூறப்படுகிறது. எனினும் பெற்றோர் அவரை கட்டாயப்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த அபிராமி, சம்பவத்தன்று வீட்டில் இருந்த பூச்சி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார்.

madurai gh

உயிருக்கு ஆபத்தான நிலையில் மயங்கி  கிடந்த அபிராமியை, அக்கம் பக்கத்தினர் மீட்டு மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில், நேற்று அபிராமி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து தந்தை முருகன் அளித்த புகாரின் பேரில் திருமங்கலம் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருமணத்தில் விருப்பம் இல்லாததால் இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.