மன்னார்குடியில் குடும்ப தகராறில் இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை!

 
poison

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் குடும்ப தகராறில் இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி தாமரைக்குளம் வடக்கரை பகுதியை சேர்ந்தவர் அருண்குமார். இவரது மனைவி நிர்மலா(35). இவர்களுக்கு திருமணமாகி 10 ஆண்டுகளுக்கு மேலாக ஆகிறது. இந்த நிலையில், கணவன் - மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதில்  நிர்மலா மனமுடைந்து காணப்பட்டு வந்துள்ளார். இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் வீட்டில் இருந்த எலி பேஸ்ட்டை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார்.

mannargudi

அவரை குடும்பத்தினர் மீட்டு மன்னார்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், புதன்கிழமை நிர்மலா உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து நிர்மலாவின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் மன்னார்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.