தென்காசி அருகே திருமணமான 3 ஆண்டுகளில் இளம்பெண் தற்கொலை - ஆர்.டி.ஓ விசாரணை!

 
poison

தென்காசி அருகே திருமணமான 3 ஆண்டுகளில் இளம்பண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து வருவாய் கோட்டாட்சியர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

தென்காசி மாவட்டம் ஊர்மேல் அழகியான் கிராமத்தை சேர்ந்தவர் ராஜா. லாரி ஓட்டுநர். இவருக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் தங்கமதி(24) என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 2 வயதில் மகள் உள்ளார். இந்த நிலையில், கணவன் - மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் தங்கமதி மனஉளைச்சலில் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில், கடந்த திங்கட்கிழமை வாழ்க்கையில் விரக்தியடைந்த அவர் அதிகளவில் துக்க மாத்திரைகளை சாப்பிட்டுள்ளார். மயங்கிய நிலையில் கிடந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி தங்கமதி உயிரிழந்தார்.

tenkasi gh

இதுகுறித்து தங்கமதியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் சாம்பவர் வடகரை போலீசார், அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும், திருமணமான 3 ஆண்டுகளில் தங்கமதி தற்கொலை செய்து கொண்டதால் வரதட்சணை கொடுமை காரணமா? என வருவாய் கோட்டாட்சியர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.