கள்ளக்குறிச்சி அருகே மின்வேலியில் சிக்கி தொழிலாளி பலி!

 
dead

கள்ளக்குறிச்சி அருகே விவசாய நிலத்தில் சட்ட விரோதமாக அமைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கி தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சிறுவங்கூர் கிராமத்தை சேர்ந்தவர் சீனிவாசன். கூலி தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் தண்டலை கிராமத்தில் நடைபெற்ற உறவினரின் துக்க நிகழ்ச்சிக்கு சென்றிருந்தார். தொடர்ந்து, நேற்று காலை இயற்கை உபாதையை கழிப்பதற்காக அங்குள்ள விவசாய தோட்டத்திற்கு சென்றுள்ளார். அப்போது, அதே கிராமத்தை சேர்ந்த வேதமாணிக்கம் என்பவருக்கு சொந்தமான நெல் வயலில், வனவிலங்குகள் புகாமல் இருப்பதற்காக சட்டவிரோதமாக மின்வேலி அமைக்கப்பட்டு உள்ளது. இதனை அறியாத சீனிவாசன் எதிர்பாராத விதமாக மின்வேலியில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

kallakurichi ttn

தகவல் அறிந்த கள்ளக்குறிச்சி போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று பலியான சீனிவாசனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து தோட்ட உரிமையாளர் வேதமாணிக்கம் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். சட்டவிரோத மின்வேலியில் சிக்கி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் தண்டலை பகுதியில் சோகத்தை பெரும் ஏற்படுத்தி உள்ளது.