மோகனூர் அருகே தேங்காய் குடோனில் மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி!

 
dead body

நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகே தேங்காய் குடோனில் மின்சாரம் தாக்கி ஆந்திர மாநில தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார். 

ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர் ராஜூ (55). இவர் நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகேயுள்ள வலையப்பட்டி பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் தேங்காய் குடோனில் பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில், சம்பவத்தன்று குடோனில் வேலை முடிந்து மின் மோட்டாரில் குளிக்க சென்றுள்ளார். அப்போது மின்மோட்டாரை ஆன் செய்தபோது தண்ணீர் வரவில்லை என கூறப்படுகிறது. இதனால் ராஜு, அருகில் இருந்த இரும்பு குழாயை எடுத்து மோட்டாரை தட்டியுள்ளார்.

namakkal GH

அப்போது, எதிர்பாராத விதமாக ராஜு மீது மின்சாரம் தாக்கியது. இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பறிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த மோகனூர் போலீசார், அவரது உடலை கைப்பற்றி பிரிசோதனைக்காக  நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து புகாரின் அடிப்படையில் மோகனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.