மனைவி பிரிந்து சென்றதால் தொழிலாளி தற்கொலை... கோவையில் சோகம்!

 
poison

கோவை துடியலூர் அருகே மனைவி பிரிந்து சென்றதால் கூலி தொழிலாளி விஷ மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

கோவை மாவட்டம் காங்கேயம் பாளையம் பகுதியை சேர்ந்தவர் அழகேஸ்வரன். கூலி தொழிலாளி. இவரது மனைவி கவிதா. அழகேஸ்வரனுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்து வந்துள்ளது. இதனால் அவர் அடிக்கடி குடித்துவிட்டு வீட்டிற்கு சென்று மனைவியிடம் தகராறு செய்து வந்துள்ளார். இது தொடர்பாக கணவன் - மனைவி இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் கடந்த ஒரு மாதத்திற்கு முன் கவிதா கணவர் அழகேஸ்வரனிடம் கோபித்துக் கொண்டு தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டார். மனைவி பிரிந்து சென்றதால் அழகேஸ்வரன் மிகுந்த மனவேதனையில் இருந்து வந்துள்ளார். 

coimbatore gh

இந்த நிலையில், வாழ்க்கையில் விரக்தி அடைந்த அழகேஸ்வரன் நேற்று முன்தினம் வீட்டில் வீடு தெளிக்க வைத்திருந்த மஞ்சள் சாயத்தை குடித்து தற்கொலை கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த துடியலூர் போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து, அழகேசன் குடும்ப தகராறில் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதும் காரணமா? என விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.