ஆம்பூர் அருகே தொழிலாளி கிணற்றில் குதித்து தற்கொலை!

 
ambur

திருப்பத்தூர் மாவட்டம்  ஆம்பூர் அருகே வேலை இல்லாத விரக்தியில் ஒட்டல் தொழிலாளி கிணற்றில் குதித்து தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம்  ஆம்பூர் அருகே உள்ள மிட்டாளம் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் (37). இவர் ஆம்பூர் பகுதியில் உள்ள ஓட்டலில் பரோட்டா மாஸ்டராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில், சுரேஷ் தற்போது வேலையின்றி வீட்டில் இருந்து வந்துள்ளார். மேலும், மதுப்பழக்கத்திற்கு அடிமையான அவர் நாள்தோறும் குடித்து வந்துள்ளார். இந்த நிலையில் வேலை இல்லாததால் வாழ்வில் விரக்தியடைந்த சுரேஷ், நேற்று வெங்கடசமுத்திரம் ரங்காபுரம் பகுதியில் உள்ள பச்சையப்பன் என்பவருக்கு சொந்தமான விவசாய கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

ambur

இதுகுறித்து அந்த பகுதி மக்கள் அளித்த தகவலின் பேரில், உமராபாத் போலீசார் மற்றும் ஆம்பூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, கிணற்றில் இருந்த சடலத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். அதில், அவர் மிட்டாளத்தை சேர்ந்த சுரேஷ் என்பது தெரியவந்தது. இதனை அடுத்து, போலீசார் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து உமராபாத் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.