திருமணமாகாத ஏக்கத்தில் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை... குமரி அருகே சோகம்!

 
poison

கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு அருகே திருமணமாகாத ஏக்கத்தில் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு அருகே உள்ள செக்காரவிளை பகுதியை சேர்ந்தவர் பிரான்சிஸ். இவரது மகன் ஜோஸ்வா (35). இவர் சென்ட்ரிங் வேலை செய்து வந்தார். இவருக்கு இன்னும் திருமணம் ஆக வில்லை. இதனால் ஜோஸவா மனவேதனையில் இருந்து வந்துள்ளார். மேலும், நாள்தோறும் குடித்துவிட்டு தகராறு செய்து வந்துள்ளார். இந்த நிலையில், கடந்த வியாழக்கிழமை தங்களது குடும்பத்திற்கு சொந்தமான கல்லறைத் தோட்டத்தில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

kumari gh

அவர் சடலமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த உறவினர்கள், இதுகுறித்து மண்டைக்காடு காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். அதன் பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, ஜோஸ்வாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குமரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து ஜோஸ்வாவின் சகோதரர் ஜஸ்டின் அளித்த புகாரின் பேரில், மண்டைக்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.